தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் தர உள்ள ஆயிரம் ரூபாய் ரொக்கதொகை பணத்தை கூட்டுறவு வங்கிகளுக்கு தமிழக அரசு அனுப்பியுள்ளது .
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 2 அடி நீள கரும்பு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5கிராம் ஏலக்காயுடன் ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்பட உள்ளது. ஆயிரம் ரூபாய் ரொக்க தொகையை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க ஏதுவாக 1677 கோடியே 40 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் ரொக்க தொகை பணத்தை கூட்டுறவு வங்கிகளுக்கு தமிழக அரசு அனுப்பியுள்ளது.
பொங்கல் பரிசு தொகுப்பை வருகிற 9ம் தேதி முதல் 12ம் தேதிக்குள் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ரேஷன் அட்டைதாரர்கள் நெரிசல் இன்றி பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 500 குடும்பங்களுக்கு மேல் உள்ள ரேஷன் கடைகளில் சுழற்சி முறையில் தெருக்கள் அல்லது பகுதி வாரியாக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
எந்தெந்த தெருக்களுக்கு எப்போது பணம், பொருட்கள் வழங்கப்படும் என்ற பட்டியல் ரேஷன் கடைகளில் எழுதி ஒட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.