உள்ளாட்சி தேர்தலில் 79வயது மூதாட்டி வீரம்மாள் வெற்றி

மேலூர் அருகே ஹரிடாபுட்டியில் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கு போட்டியிட்ட 79 வயதான மூதாட்டி வெற்றி பெற்றார். மதுரை மாவட்டம் மேலூர் அடுத்த ஹரிடாபுட்டியைச் சேர்ந்த வீரம்மாள் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். அவருடன் இப்பதவிக்கு மேலும் 7 பேர் போட்டியிட்டனர்.

 

இந்தநிலையில் 195 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ஏற்கனவே இரண்டு முறை போட்டியிட்ட வீரம்மாள் இந்த முறை வெற்றி பெற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.


Leave a Reply