தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளி மண்டலத்தின் கீழ்ப் பகுதியில் கிழக்கு திசை காற்ரூம் மேற்கு திசை காற்றும் தமிழக பகுதியில் சந்தித்துக்கொள்வதால் பரவலாக மழை பெய்து உள்ளதாக வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலசந்திரன் கூறியுள்ளார்.

 

வடகிழக்கு பருவ மழை வரும் ஐந்தாம் தேதி வரை நீடிக்கும் என்றும் சென்னையை பொறுத்தவரை இரண்டு நாட்களுக்கு விட்டுவிட்டு மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார். சென்னை செம்மஞ்சேரியில் 4 சென்டி மீட்டரும், மீனம்பாக்கம் கொளப்பாக்கம் மற்றும் குன்னூரில் 3 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.


Leave a Reply