டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் தற்கொலை செய்த வீட்டில் டாக்டர் குடும்பம் ஒன்று துணிச்சலாக குடியேறியுள்ளது. கடந்தாண்டு புராரி நகரிலுள்ள ஒரு வீட்டில் சுந்தா அவார்ட் என்ற குடும்பத்தை சேர்ந்த 11 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்கள்.
நாடெங்கும் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீட்டில் கைப்பற்றப்பட்ட டைரி களில் நாங்கள் மோட்சத்திற்கு செல்கிறோம் என்ற குறிப்புகள் காணப்பட்டன. இறந்த லலித் என்பவரின் சகோதரர் வசமுள்ள அந்த வீட்டிற்கு நீண்ட நாட்களாக யாரும் குடியேறாத நிலையில், மோகன் என்ற டாக்டர் குடும்பம் குடியேறியது. அங்கு மருத்துவ பரிசோதனை மையம் திறக்கப்பட்டுள்ளது.
பேய் வீடு என்று அழைக்கப்படும் அந்த வீட்டில் சடங்குகள் செய்து இருப்பதாகவும், தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு பேய் இருப்பது போன்று எந்த உணர்வும் இல்லை என புதிதாக குடியேறிய மோகன் தெரிவித்துள்ளார்.