கிறிஸ்துமஸ் கேரலாக வந்த டொனால்ட் டரம்ப் பதவி நீக்க பாடல்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை பதவியிலிருந்து நீக்கும் தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட இருக்கும் ஜோ பைரனுக்கு எதிராக உக்ரைன் நாட்டில் சதித்திட்டம் தீட்டினார்.

 

ஜோ பைரனுக்கு எதிராக உக்ரைன் அதிபரிடம் சதிசெய்ய பேரம் பேசினார் என்று டொனால்ட் டிரம்ப் மீது குற்றச்சாட்டு பேரிலான விசாரணையில் அமெரிக்க சபாநாயகர் நோன்சி போல்ஸி இந்த தீர்மானம் நிறைவேறியதாக அறிவித்தார். இந்த நிலையில் டிரம்புக்கு எதிரான நடவடிக்கைகளை கிறிஸ்துமஸ் அமெரிக்காவின் இசைக்குழு தோற்றுவித்துள்ளது.

 

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ட்ரம் மீதான நடவடிக்கையை 12 கேரல்களாக வரிசைப்படுத்தி உள்ளது இந்த குழு. வாஷிங்டன் சர்வதேச இசை குழுவால் தயாரிக்கப்பட்ட இந்த பாடல் உக்ரைன் அதிபர் உடனான தொலைபேசி உரையாடல் அது வெளிவந்த விதம், அதன் பின்பு மேற்கொள்ளப்பட்ட விசாரணை மற்றும் தீர்ப்பு என அனைத்தையும் விளக்கும் வகையில் உள்ளது.

 

பிரதிநிதிகள் அவையில் அதிபர் டிரம்புக்கு எதிராக நிறைவேறிய தீர்மானம் அடுத்த செனட் அவையில் விசாரணைக்கு வர உள்ளது. கிறிஸ்மஸ் நேரத்தில் கிறிஸ்மஸ் கேரலாக வந்துள்ள இந்த பாடல் இணையத்தில் வரவேற்பை பெற்றுள்ளது.


Leave a Reply