தங்கப்புதையல் என கூறி 2 கிலோ கவரிங் நகையை விற்க முயன்ற 2 பேர் கைது

சென்னை குறுக்குப்பேட்டையில் தங்கப்புதையல் எனக் கூறி இரண்டு கிலோ கவரிங் நகையை விற்க முயன்ற வடமாநிலத்தை சேர்ந்த ஒருவர் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர். குறுக்கு பேட்டை தியாகராய செட்டி தெருவில் சசிகுமார் என்பவர் உணவகம் நடத்தி வருகிறார்.

 

அவரது கடைக்கு உணவு அருந்த வந்த பிரகாஷ் என்பவர் தான் கர்நாடகாவில் பொக்லைன் இயந்திரம் ஆபரேட்டராக இருப்பதாகவும், தான் வேலை செய்த இடத்தில் புதையல் ஒன்று கிடைத்ததாகவும் கூறியுள்ளார்.

 

ஆனால் யாருடைய அறிமுகமாகி இல்லாததால் அதனை விற்பனை செய்ய முடியவில்லை என கூறிய பிரகாஷ் அதனை விற்றுத் தருமாறு சசிகுமாரிடம் கூறியுள்ளார். இதற்கு சசிகுமாரும் சம்மதம் தெரிவித்து புதையலை எடுத்து வருமாறு தெரிவித்துள்ளார்.

 

சில நாட்களில் குஜராத்தை சேர்ந்த ஹரிஷ் என்பவருடன் பழங்காலச் செயின்களை கொண்டு வரைந்து புதையல் எனக்கூறி சசிகுமாரிடம் கொடுத்துள்ளார் பிரகாஷ். ஆனால் நகைகளை பார்த்து சந்தேகம் அடைந்த சசிக்குமார் போலீசாருக்கு தகவல் அளித்தார். விரைந்துவந்த போலீசார் பிரகாசையும் அவரது நண்பரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Leave a Reply