ஜார்க்கண்ட் நான்காம் கட்ட தேர்தல்- 56.58% வாக்குப்பதிவு

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டப்பேரவைக்கு நடைபெற்ற நான்காம் கட்ட தேர்தலில் 56.58 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கு நான்காம் கட்டமாக புகாரோ உள்ளிட்ட 15 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

 

ஒரு சில சம்பவங்களைத் தவிர தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 65 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றுள்ளது. வரும் 20ஆம் தேதி இறுதி கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.


Leave a Reply