மதுக்கடையில் காசு கேட்டு மிரட்டிய ரவுடிகள்

புதுச்சேரி திருபுவனை தனியார் மது கடையில் மது குடித்துவிட்டு அதற்கு பணம் கேட்டதற்காக நாட்டு வெடிகுண்டு வீசிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

திருபுவனை திருவண்டார்கோயில் கொத்தபுரி நத்தம் பகுதியில் இயங்கி வரும் தனியார் மதுக் கடையில் நேற்று இரவு மூன்று இளைஞர்கள் மது அருந்துயுள்ளனர். பின்னர் அவர்கள் புறப்பட்டபோது கடை ஊழியர்கள் மது அருந்துவதற்கான பணத்தை கேட்டு உள்ளனர்.

 

ஆனால் அந்த இளைஞர்கள் பணத்தை தர மறுத்ததோடு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது காசாளரை மிரட்டிய அந்த நபர்கள் தங்களுக்கு மேலும் மது மற்றும் பணத்தை தருமாறு மிரட்டியுள்ளனர். காசாளர் தர மறுக்கவே கடைக்கு வெளியில் நின்றிருந்த இளைஞர்கள் கடை மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசி அங்கிருந்து தப்பியோடினர்.


Leave a Reply