கால்களால் விமானத்தை இயக்கும் ஜெசிகா!

கைகள் இன்றி விமானம் ஓட்டுகிறார் இளம்பெண் ஒருவர். கடந்த ஒரு வாரமாக சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளார் அவர். விமானத்தை இயக்கும் இந்த கால்கள் உலகத்திற்கு சொல்லும் செய்தி மிகவும் அதி உன்னதமானது.

 

குறைகளை வெல்ல திறமைகள்தான் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதற்கான சாட்சியே இந்த காட்சிகள். அமெரிக்காவின் ஹரிசோனாவை சேர்ந்த ஜெசிகா பிறக்கும்போதே மரபு குறைபாட்டால் தனது இரண்டு கைகளையும் இழந்தவர்.

 

அதனை பார்க்கும் அனைவரும் குறைகளை மட்டுமே இருப்பதை ஏற்றுக்கொள்ள மறுத்து ஜெசிகா திறமையைக் கொண்டு அதனை மாற்ற நினைத்துள்ளார். ஜிம்னாஸ்டிக், நடனம், தற்காப்பு கலைகள் என ஒவ்வொன்றாக கற்கத் தொடங்கி உள்ளார் ஜெஸிகா.

 

ஒரு கட்டத்தில் தன்னுடைய அனைத்து பணிகளையும் கால்களாலேயே செய்ய ஆரம்பித்தார் ஜெசிகா. எழுதுவது, சமையல், கார் ஓட்டுதல் என அனைத்தையும் கால்களாலேயே செய்யத் தொடங்கினார் ஜெஸிகா. இதனையடுத்து தந்தையின் நண்பர் ஒருவரின் முயற்சியால் விமானத்தை இயக்க ஆரம்பித்துள்ளார் ஜெஸிகா.

 

கடும் முயற்சிகளுக்குப் பின்னர் பைலட் அனுமதியையும் பெற்றுள்ளார். கடந்த 2008 ஆம் ஆண்டிலிருந்து விமானத்தை இயக்கி வருகிறார் ஜெஸிகா. இந்தநிலையில் அவரது வீடியோவை பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். மூன்று நாட்களில் சுமார் 2 கோடி பேர் பார்வையிட்டுள்ளனர்.

 

தன்னம்பிக்கையின் மொத்த உருவமாக ஜெசிகாவை கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர் இணையவாசிகள். அந்த கொண்டாட்டத்திற்கு அவர் பொருத்தமான வரும் கூட.


Leave a Reply