டிக் – டாக் செயலியில் பெண்கள் குறித்து ஆபாச விமர்சனம்

மதுரையில் டிக் டாக் செயலியில் குடும்பப் பெண்களை ஆபாசமாக பேசி அவதூறு பரப்பிய நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டம் ஒத்தக்கடையைச் சேர்ந்தவர் மீனாட்சி.

 

இவரது தோழி கயல் இணைபிரியா தோழிகளான இருவரும் டிக் டாக் செயலியில் வீடியோக்களை பதிவிட்டு லைக்குகளை அள்ளி வந்தனர். இந்நிலையில் டிக்டாக் செயலி மூலம் தேனியை சேர்ந்த சுகந்திக்கும் மீனாட்சி மற்றும் கயலுக்கும் இடையே நட்பு ஏற்பட்டது.

 

மூவரும் போட்டி போட்டுக்கொண்டு வீடியோக்களை பதிவிட மீனாட்சிக்கும் சுகந்திக்கு இடையே தகராறு ஏற்பட்டு அவர்களது நட்பு முறிந்தது. இதனால் ஆத்திரமடைந்த சுகந்தி மீனாட்சியை பழிவாங்க முடிவு செய்தார். இதற்காக தமது நண்பர் செல்வாவின் உதவியை நாடியிருக்கிறார் சுகந்தி.

 

இதன் தொடர்ச்சியாக மீனாட்சி மற்றும் கயலை ஆபாச வார்த்தைகளால் திட்டி கீழ்த்தரமான வீடியோக்கள் டிக் டாக் செயலிகளை உலா வந்தன. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மீனாட்சி ஒத்தக்கடை காவல் நிலையத்திலும் கயல் மதுரை மாநகர காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர்.

 

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சுகந்தி மற்றும் அவரது நண்பர் செல்வா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டிக் டாக் போன்ற சமூகவலைதளங்கள் மூலம் பிரபலமாக வேண்டும் என்று ஆசைப்பட்டு ஏராளமான பெண்கள் சிக்கல்களில் மாட்டிக் கொள்வது தொடர்கதையாகி வருகிறது.


Leave a Reply