திருவாரூர் மாவட்டத்தில் உண்மை காரணத்தை கூறி விடுமுறை விண்ணப்பம் எழுதிய அரசுப்பள்ளி மாணவனின் நேர்மைக்கு சமூகவலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
திருவாரூர் அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் தீபக் கடந்த 18ஆம் தேதி விடுமுறை அளிக்க வேண்டி வகுப்பு ஆசிரியருக்கு கடிதம் எழுதியுள்ளான். அதில் தனது வீட்டின் அருகே நடைபெற்ற கபடி போட்டியை இரவு முழுவதும் தூங்காமல் பார்த்ததால் உடல் சோர்வாக உள்ளதாகவும், இதனால் தனக்கு ஒரு நாள் விடுமுறை அளிக்குமாறு அந்த கடிதத்தில் மாணவன் குறிப்பிட்டுள்ளார்.
இதனைப் படித்ததும் மாணவனின் நேர்மையை உணர்ந்த வகுப்பாசிரியர் அந்த விண்ணப்பத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். மாணவனின் நேர்மையை சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.
மேலும் செய்திகள் :
திருவாடானை அருகே கோவிலில் லட்சார்ச்னை! ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்!
மின்சாரம் தாக்கி டைல்ஸ் தொழிலாளி பலி.. போலீஸ் விசாரணை..!
வார விடுமுறை.. நாளை முதல் சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு..!
ஸ்டாலின் சமரசம்.. நோட்டீஸை வாபஸ் பெற தயாநிதி முடிவு..!
செயின் பறிப்பு வழக்கில் 2 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை..!
ஜூலை 16ல் திருவண்ணாமலையில் அதிமுக ஆர்ப்பாட்டம்..!