நாடு முழுவதும் என்.ஆர்.சி நடைமுறையை பின்பற்ற பரிசீலனை

நாடுமுழுவதும் தேசிய மக்கள் பதிவேடு நடைமுறையை கொண்டுவரும் திட்டம் பரிசீலனையில் இருப்பதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

 

மாநிலங்களவையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறி உள்ளவர்களை அடையாளம் காணும் என்‌ஆர்‌சி எனப்படும் தேசிய மக்கள் பதிவேடு நடைமுறையை நாடுமுழுவதும் பின்பற்றுவது பரிசீலனையில் உள்ளதாக தெரிவித்தார்.

 

அதே நேரத்தில் மதரீதியாக என் ஆர்சி நடவடிக்கை இருக்காது என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். ஏற்கனவே அசாம் மாநிலத்தில் என்‌ஆர்‌சி வரைவு பட்டியல் வெளியிடப்பட்டு அதன் காரணமாக சர்ச்சை ஏற்பட்டிருக்கும் நிலையில் அமைச்சர் இத்தகவலை தெரிவித்துள்ளார்.

 

இதேபோல் ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒரு உயிரிழப்பு கூட நடக்கவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் எழுப்பிய கேள்விக்கு அமித்ஷா பதில் அளித்தார்.

 

370 நீக்கப்பட்டால் ரத்த வெள்ளம் பெருக்கெடுக்கும் என்று சொல்லப்பட்ட நிலையில் அப்படிப்பட்ட சூழ்நிலை இல்லாமல் சட்டம் ஒழுங்கு மிகவும் சரியான முறையில் பராமரிக்கப்படுகிறது என்றும் அமித்ஷா தெரிவித்தார்.


Leave a Reply