நீலகிரியில் நடைபெற்ற முதல்வரின் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம்

நீலகிரியில் நடைபெற்ற முதல்வரின் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம்.அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு 2615 பயனாளிகளுக்கு ரூ.16.49 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

 

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் தமிழக முதல்வரின் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம்,பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் 66 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா முன்னிலையில் இன்று நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு 2615 பயனாளிகளுக்கு ரூ.16.49 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர்,பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சி காலம் தமிழக வரலாற்றில் பொற்காலமாகும்.தமிழகத்தில் எந்த ஆட்சி காலத்திலும் செய்யாத சாதனையாக நிதி ஒதுக்கீடு செய்தும்,இணை சொல்லாத திட்டங்களின் மூலம் எண்ணற்ற பணிகளை மேற்கொண்டும் சரித்திர சாதனை படைத்தவர் அவர் எனவும் புகழாரம் சூட்டினார்.

 

மேலும்,நகராட்சி நிர்வாம்,ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறையின் சார்பில் நீலகிரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சித்திட்ட பணிகளை பட்டியலிட்டார்.நீலகிரி மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையான மருத்துவ கல்லூரி அமைப்பது குறித்து தமிழக முதல்வர் மத்திய அரசிடம் அனுமதி பெற்று ரூ.350 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.முதற்கட்டமாக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.விரைவில் மருத்துவக்கல்லூரி கட்டும் பணி துவங்கப்பட உள்ளது என தெரிவித்தார்.

 

இந்நிகழ்ச்சியில் குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் சாந்தி ( எ ) ராமு,முன்னாள் அமைச்சர் புத்திசந்திரன்,முன்னாள் மாநிலங்களவை எம்.பி கே.ஆர்.அர்ஜூனன்,மாவட்ட வருவாய் அலுவலர் நிர்மலா உள்ளிட்ட அரசு அதிகாரிகள், பயனாளிகள் உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.


Leave a Reply