இலங்கை அதிபராக கோத்தபய வெற்றி ; இலங்கை தமிழர்கள் மீண்டும் கலக்கம்!!

இலங்கையில் நடைபெற்று முடிந்த அதிபர் தேர்தலில், பெரும்பான்மை சிங்களவர்களின் அமோக ஆதரவில், முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் சகோதரரும், முன்னாள் ராணுவ அமைச்சருமான கோத்தபய ராஜபக்சே புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கோத்தபய அதிபராகி விடக்கூடாது என்றே அங்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வசிக்கும் பெரும்பான்மையான தமிழர்களும், இஸ்லாமியர்களும் ஒட்டு மொத்தமாக சஜித் பிரேமதாசாவுக்கு வாக்குகளை குவித்தனர். ஆனாலும் தமிழர்களுக்கு எதிரான மனநிலையில் உள்ள பெரும்பான்மை சிங்களவர்களோ, கோத்தபயவுக்கு ஆதரவுக் கரம் நீட்ட அவர் வெற்றி பெற்று விட்டார்.

 

கோத்தபய அதிபராகி விடக் கூடாது என தமிழர்கள் அஞ்சியதற்கு காரணம் சாதாரண விஷயமில்லை. அரை நூற்றாண்டுக்கும் மேலாக, தங்கள் உரிமைகளுக்காக போராடி வந்த தமிழர்களின் ஒட்டு மொத்த போராட்டத்தையும் அடக்கி ஒடுக்கி முடிவுக்கு கொண்டு வந்தவர்கள் ராஜபக்சேவும், கோத்தபயவும் தான். 2009-ல் நடந்த இறுதிக்கட்ட போரில், ஈவு, இரக்கமின்றி கொத்துக் கொத்தாக அழித்தவர்கள் இவர்கள் தான். எனவே தான் கோத்தபய கையில் நாடு மீண்டும் சென்றால் மீண்டும் தாங்கள் அடக்கி, ஒடுக்கப்படுவோம் என்று தமிழர்கள் அஞ்சி, அவருக்கு எதிராக வாக்களித்தனர்.

ஆனாலும், தேர்தல் முடிவுகளில் தமிழர்களின் நம்பிக்கை வீண் போய்விட்டது. யார் வரக்கூடாது என்று அஞ்சினார்களோ அவருடைய கையில் மீண்டும் அதிகாரம் வந்து விட்டது. இதனால் கோத்தபய அதிபரானது இலங்கை வாழ் தமிழர்களுக்கு மீண்டும் ஒரு அச்சத்தையே ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.

 

இதனால் தான் இலங்கைத் தமிழர்களுக்காக பல காலமாக குரல் கொடுத்து வரும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கோத்தபயவின் இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவிக்கையில், கோத்தபய ராஜபக்சவுக்கு வாக்களிக்காத இலங்கை தமிழர்களுக்கு நன்றி.
கோத்தபய ராஜபக்ச வெற்றிபெற்ற இந்த நாள் இலங்கை வரலாற்றில் ஒரு மோசமான நாள் என்று குமுறலாக தெரிவித்துள்ளார்.


Leave a Reply