‘சுவாமியே சரணம் ஐயப்பா” கார்த்திகை முதல் தேதியில் ஐயப்ப பக்தர்கள் துளசி மாலை அணிந்து விரதம் தொடக்கம்..

இன்று கார்த்திகை முதல் தேதியில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கியதால், பல்வேறு கோயில்களில் கூட்டம் அலைமோதியது. துளசி மாலை, ருத்ராட்ச மாலை மற்றும் பூஜைப் பொருட்களின் விற்பனையும் களைகட்டியுள்ளது.

 

மண்டல மற்றும் மகர பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை,கார்த்திகை முதல் தேதி முதல் தை மாதம் 5-ம் தேதி வரை திறந்திருப்பது வழக்கம். இந்தக் காலக்கட்டத்தில் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் இருந்து, இரு முடிக்கட்டுடன் சபரிமலை சென்று ஐயப்பனை தரிசிப்பது வழக்கம்.

 

இதற்காக கார்த்திகை முதல் தேதியிலேயே பெரும்பாலான பக்தர்கள் உள்ளுரில் உள்ள கோவில்களில் புனித நீராடி, மாலை அணிவது வழக்கம். இதனால் இன்று பெரும்பாலான கோவில்களில் அதிகாலை முதலே ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.அத்துடன் துளசி மாலை, ருத்ராட்ச மாலை, பூஜைப் பொருட்கள், மற்றும் பூக்கள் விற்பனையும் களைகட்டியுள்ளது.


Leave a Reply