இந்தோனேசியாவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது; ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவான நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுப்பட்டு திரும்பப் பெறப்பட்டது.
இந்தோனேஷியாவின் மொலுக்கா தீவு அருகே, வடமேற்கு நகரமான டெர்னேட் என்ற இடத்தை மையமாக கொண்டு, ரிக்டர் அளவில் 7.1 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது. இதனால், கட்டிடங்கள் குலுங்கின. மக்கள் பீதியுடன், வீடுகளை விட்டு திறந்த வெளிக்கு ஓடினர்.
இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டதால், மக்கள் உயரமான பகுதிகளில் தஞ்சமடைந்தனர். எனினும், இந்த எச்சரிக்கை பின்னர் திரும்பப் பெறப்பட்டது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக, இதுவரை தகவல் எதுவும் இல்லை.
மேலும் செய்திகள் :
3 நாள் ஸ்டிரைக்.. ரேஷன் கடை ஊழியர்களுக்கு எச்சரிக்கை
புனித யாத்திரைக்கு முன்னதாக பயங்கர சதித்திட்டம்!
நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற மாணவர் யுபிஎஸ்சி தேர்வில் தமிழ்நாட்டு அளவில் முதலிடம்..!
டாஸ்மாக் ரெய்டு வழக்கில் நாளை தீர்ப்பு..!
போப் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல்!
ராகுல் காந்தி வெளிநாடுகளில் இந்தியாவை இழிவுப்படுத்துவார்: பா.ஜ.க