சென்னையில் திருமண நடைபெற இருந்த மணமகன் திடீரென மாயம்

சென்னையில் திருமண வரவேற்புக்காக அலங்காரம் செய்து கொள்ள சென்ற மணமகன் திடீரென மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சென்னையை அடுத்த மீனம்பாக்கம் பகுதியை சேர்ந்த குணசேகரன் என்பவரின் மகன் சுகுமாரனுக்கும், திருவல்லிக்கேணியை சேர்ந்த பெண்ணிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு பல்லாவரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இன்று காலை திருமணம் நடப்பதாக இருந்தது.

 

நேற்று திருமண வரவேற்புக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. வரவேற்பில் பங்கேற்பதற்காக அலங்காரம் செய்து கொள்ள மணமகன் சுகுமாரன் அருகிலுள்ள அழகு நிலையம் ஒன்றிற்கு சென்றுள்ளார். அதன்பிறகு சுகுமாரன் வீடு திரும்பாததையடுத்து குடும்பத்தினரும். உறவினர்களும் அவரை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர்.

 

அவர் கிடைக்காததையடுத்து திருமணம் நின்றது. இதுதொடர்பாக சுகுமாரனின் தந்தை குணசேகரன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து திருமணத்திற்கு முன்பு மாயமான மணமகன் சுகுமாரனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சுகுமாரன் கடத்தப்பட்டாரா அல்லது திருமணம் பிடிக்காமல் சென்றாரா என்று விசாரித்து வருகின்றனர்.


Leave a Reply