6 விக்கெட் வீழ்த்திய தீபக் சஹர் பந்துவீச்சாளர் தரவரிசையில் விறுவிறு முன்னேற்றம்

வங்கதேசத்திற்கு எதிரான 20 ஓவர் போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம்,
இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹர், சிறந்த பந்துவீச்சாளருக்கான பட்டியலில் 42-வது இடத்திற்கு முன்னேறினார்.

 

நாக்பூரில் அண்மையில் இந்திய – வங்கதேச அணிகள் மோதிய 20ஒவர் போட்டி நடைபெற்றது. இதில், இந்தியா 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, தொடரையும் கைப்பற்றியது.

 

இப்போட்டியில் 27 வயதே நிரம்பிய இந்தியாவின் இளம் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹர், வெறும் 7 ரன் கொடுத்து, லிட்டன் தாஸ், சௌமயா சர்க்கார், முகமது மிதுன், அமினுல் இஸ்லாம், ஷைஃபுல் இஸ்லாம் மற்றும் முஸ்தாபிசுர் ரஹ்மான் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

 

அத்துடன், டி20 போட்டிகளில் ஹார்ட்ரிக் எடுத்த முதல் இந்தியர் என்னும் பெருமையை அவர் இவர் பெற்றார். இதன் மூலம், சிறந்த பந்துவீச்சாளருக்கான பட்டியலில் 42-வது இடத்திற்கு அவர் முன்னேறி உள்ளார்.


Leave a Reply