தமிழகத்தில் குடிநீர் பிரச்சினையை நிரந்தரமாக தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்கள் மீது எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 21 தீர்மானங்கள் திமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
ராயப்பேட்டையில் நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில் தமிழக இளைஞர்களுக்கு 90 சதவீத வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தியும், கீழடி அகழாய்வு பணிகள் தொய்வின்றி நடக்க மத்திய மாநில அரசுகள் துரிதப்படுத்த கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக நடத்தப்படாமல் உள்ள உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. குலக் கல்வி முறைக்கு புத்துயிர் அளிக்கும் புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையை திரும்பப் பெற வலியுறுத்தியும் திமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.