திருச்சி மணப்பாறையில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சிறுவன் சுர்ஜித்தின் குடும்பத்தினருக்கு அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்ட நிவாரண நிதியாக 10 லட்சம் ரூபாய்க்கான வரைவோலை வழங்கப்பட்டது.
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த நடுக்காட்டிப்பட்டியில் கடந்த மாதம் 25ஆம் தேதி வீட்டின் அருகே இருந்த ஆழ்துளை கிணற்றில் இரண்டரை வயது சிறுவன் சுர்ஜித் தவறி விழுந்தான். சுர்ஜித்தை மீட்க கடும் போராட்டம் நடந்த நிலையில் 29ஆம் தேதி சுர்ஜித் சடலமாக மீட்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து நிகழ்விடத்திற்கு சென்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுர்ஜித் பெற்றோருக்கு ஆறுதல் கூறி அரசு தரப்பில் 10 லட்சம் ரூபாயும், அதிமுக கட்சி சார்பில் 10 லட்சம் ரூபாயும் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
இதையடுத்து அதிமுக கட்சி சார்பிலான நிவாரண நிதியாக 10 லட்சம் ரூபாய்க்கான வரைவோலை சுர்ஜித்தின் பெற்றோரிடம் வழங்கப்பட்டது. இதனை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், எஸ் வளர்மதி ஆகியோர் வழங்கினர்.