அயோத்தி வழக்கில் இன்று காலை தீர்ப்பு வெளிவரும் நிலையில், அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று, தமிழக மக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள வேண்டுகோளில், சாதி, மத பூசல் இன்றி தமிழ்நாட்டை அமைதிப்பூங்காவாக தமிழக அரசு பராமரித்து வருகிறது. பிரச்னைக்கு இடம் கொடுக்காமல் தமிழகத்தை தொடர்ந்து அமைதி பூங்காவாக திகழ செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.
உச்ச நீதிமன்றம் அளிக்கும் அயோத்தி வழக்கின் தீர்ப்பை அனைத்து தரப்பினரும் மதிக்க வேண்டும். இந்தியாவிற்கே தமிழகம் முன்னுதாரணமாக விளங்குவதற்கு அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைக்க வேண்டும் என்று முதல்வர் பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.