சினிமாவில் நடிக்க வைப்பதாக ஏமாற்றி பாலியல் தொழிலில் தள்ளியவர்கள் கைது

சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கித்தருவதாக கூறி பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவத்தில் 14 பேரை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் நெல்லூரில் பல இடங்களில் பாலியல் தொழில் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

 

குறிப்பாக சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி பெண்களை ஏமாற்றி ஒரு கும்பல் பாலியல் தொழிலில் ஈடுபடுவதும் கண்டறியப்பட்டது. இந்நிலையில் கோம்பூர் சேர்ந்த சிறுமி அளித்த புகாரின் பேரில் 6 பெண்கள் உட்பட 14 பேரை போலீசார் கைது செய்தனர்.

 

மேலும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 7 பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கார், செல்போன், 12 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.


Leave a Reply