ரிஷப் பந்தை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்!

சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணியில் மிகவும் பேசுபொருளாக மாறியுள்ளவர் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த். இதுவரை இவரது பேட்டிங் குறித்த கேள்விகள் எடுக்கப்பட்ட நிலையில் தற்போது இவரது கீப்பிங் குறித்தும் சில கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்திய அணியின் அனுபவ வீரர் தோனி உலக கோப்பை தொடருக்கு பிறகு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவில்லை.

 

ஆகவே இவருக்கு அடுத்து மாற்று வீரராக ரிஷப்பந்திற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. ஆகவே இவரை ரசிகர்கள் தோனியுடன் ஒப்பிட்டு ரிஷப்பந்த் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி வருகின்றனர். இதற்கு பல முன்னணி வீரர்கள் தோனியுடன் யாரையும் ஒப்பிட கூடாது என்றும் அவர் ஒரு ஜாம்பவான் வீரர் என்றும் தெரிவித்தனர்.

 

மேலும் ரிஷப்பந்த் தற்போது தான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் களம் இறங்கி வருகிறார் என்றும் அவர் சிறப்பாக செயல்பட சில காலங்கள் தேவைப்படும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் தற்போது நடைபெற்று வரும் பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரில் ரிஷப் மிகவும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டு உள்ளார்.

 

இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி பங்களாதேஷ் அணியுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த தோல்விக்கு காரணம் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கான பல வாய்ப்புகள் இருந்த போதிலும் அதனை இந்திய அணி சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதுதான்.

 

குறிப்பாக முஸ்பிகுர் சாகல் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ ஆனபோது ரோகித் சர்மா ரிவியு கேட்காதது, அதனை சரியாக கணித்து ரிஷப் சொல்லாதது போன்றவை, மேலும் சவுமியா சர்க்கார் ஆடும்போது சாகல் வீசிய பத்தாவது ஓவரின் கடைசி பந்து பேட்டில் பட்டதாக நினைத்து அதனை பிடித்த ரிஷப் ரிவ்யூ கேட்க சொன்னார். ஆனால் அதில் கேப்டன் ரோகித்திற்கோ பந்துவீச்சாளர்களுக்கோ பெரிதாக நம்பிக்கை இல்லை.

 

ஆனால் ரிஷப் அவுட் என அடித்துச் சொல்ல நம்பி கேட்டார் ரோகித். இறுதியில் அது தவறாகி விட்டது. தோனி களத்தில் இருக்கும் போது ஸ்டெம்பிங் சம்பந்தமான விக்கெட்டுகள் வீழ்ந்த பட்டால் அவர் உடனே கேப்டனை ரிவியு கேட்கச் சொல்வார். அவை பெரும்பாலான நேரங்களில் சரியாகவே அமைந்திருக்கின்றன. ஆகவே தோனியுடனான நம்பகத்தன்மையை ஒப்பிட்டு ரிஷப் பந்தை கலாய்த்து தள்ளிவிட்டனர் நெட்டிசன்கள் .


Leave a Reply