குண்டு வெடிப்பால் குலுங்கிய மணிப்பூர்- போலீசார் உட்பட பலர் காயம்

வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில், இன்று காலை நிகழ்ந்த சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பில், 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

 

மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உள்ள தங்கல் பஜார் பகுதி இன்று காலை 9:30 மணியளவில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில், அருகில் இருந்த கட்டிடங்கள், கடைகள், வாகனங்கள் சேதமடைந்தன.

 

இந்த கோர சம்பவத்தில், ஐந்து போலீஸ்காரர்கள் உட்பட, ஆறு பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

இச்சம்பவத்தை தொடர்ந்து, தலைநகர் இம்பலைல் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சம்பவ இடத்தை மணிப்பூர் முதல்வர் பைரன் சிங் நேரில் பார்வையிட்டார். இந்த சம்பவத்திற்கு யாரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Leave a Reply