தடைசெய்யபட்ட நெகிழியை விற்பனை செய்த கடைகளுக்கு ” ஸ்பாட் பைன் ” – கோவை மாநகராட்சி ஆணையர் அதிரடி நடவடிக்கை !!!

கோவையில் மாநகராட்சி அதிகாரிகள் இன்று அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். தமிழக அரசு நெகிழிப்பைகளுக்கு தடைவிதித்துள்ளது. இந்நிலையில் தடைசெய்யப்பட்ட நெகிழிப்பைகளை வேறு வடிவில் தயாரித்து விற்பதாக கோவை மாநகராட்சி அலுவலகத்துக்கு புகாா்கள் வந்தன.

இதை தொடர்ந்து பூமார்கெட் பகுதியில் உள்ள கடைகளில் திடீரென ஆய்வு செய்த ஆணையர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்து வந்த கடைகளில் இருந்து பறிமுதல் செய்து அபராதம் விதிக்க உத்தரவு பிறப்பித்தார்.

மூன்றுக்கும் மேற்பட்ட கடைகளில் தடைசெய்யப்பட்ட நெகிழி இருந்ததால் விற்பனையாளருக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வரையில் அபராதம் விதித்தார்.அதிகாரிகள் உடனடியாக அபராத தொகையும் வசூல் செய்தனர்.இந்நிகழ்வு காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆணையர் ஷ்ரவன்குமார் ஜடாவத் விற்பனையாளர்களிடம் தடைசெய்யப்பட்ட பொருட்களை விற்பதற்கான கொடுத்த கால அவகாசம் முடிந்து விட்டதாகவும், மீண்டும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடவேண்டாம் எனவும்,மாநகராட்சி பகுதியில் தொடர்ந்து சோதனை நடக்கும் எனவும் குறிப்பிட்டார். அதேபோன்று சாலை ஆக்கிரமிப்பு உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுங்கள் என அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.மாநகராட்சி ஆணையரின் இந்த திடீர் ஆய்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply