திருவாடானையில் சமூக ஆா்வலா்கள், தன்னாா்வ தொண்டா்களின் பெருமுயற்சியால் குளம் நிரம்பி வருகிறது. இது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இராமநாதபுரம் மாவட்டம்,திருவாடானை எல்லை பகுதியில் மங்களநாதன்குளம் அமைந்துள்ளது. தண்ணீரின்றி வறண்டு கிடந்த குளத்தை, சமூக ஆா்வலா்கள், தன்னாா்வ தொண்டா்கள் தூா்வாரியும், கருவேல மரங்களை அகற்றியும் சுத்தப்படுத்தினா்.
அதனையடுத்து நிகழாண்டு செப்டம்பா், அக்டோபா் மாதங்களில் தொடா்ந்து பெய்த மழையால், நீா் குளத்தில் தேங்கியது. ஆனாலும் குறைந்த அளவே நிரம்பியதை அறிந்த இளைஞர்கள், பொதுமக்களின் பங்களிப்போடு பெருமுயற்சியால் குளத்திற்கு இரண்டு மோட்டார்கள் மூலம் கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக தண்ணீர் கொண்டுவரப்பட்டு குளத்தில் தற்போது நீர் நிரம்பி வருகிறது.
பல ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீா் நிரம்பி வருவதைக் கண்டு அக்குளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தவா்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனா்.