ஏ.கே.ஆர் அகாடமி (சி.பி.எஸ்.இ ) பள்ளியில் “விபத்தில்லா தீபாவளி” எனும் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி

திருப்பூர், திருமுருகன்பூண்டி, அணைப்புதூரில் செயல்பட்டு வரும் ஏ.கே.ஆர் அகாடமி (சி.பி.எஸ்.இ ) பள்ளியின் ரோட்டரி இன்டராக்ட் கிளப், அவினாசி தீயணைப்புத் துறை மற்றும் திருப்பூர் ரோட்டரி சங்கம் சார்பில் “விபத்தில்லா தீபாவளி“ எனும் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி ஏ.கே.ஆர் பள்ளி வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் லட்சுமி நாராயணன் தலைமை தாங்கினார். முதல்வர் மணிமலர் வரவேற்றார்.

இந்நிகழ்ச்சியில் அவினாசி தீயணைப்புத் துறையின் அதிகாரி பாலசுப்பிரமணியம் மற்றும் பொன்னுச்சாமி உள்பட தீயணைப்பு வீரர்கள் கலந்து கொன்டு மாணவர்களுக்கு விபத்தில்லாமல் தீபாவளியை எவ்வாறு பாதுகாப்பாக கொண்டாடுவது என்று செயல்முறை விளக்கத்துடன் விளக்கிக் காட்டினர்.

மாணவர்களைக் கொண்டு பட்டாசுகளை வெடிக்கச் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி சுப்பிரமணியன் செய்து இருந்தார்.


Leave a Reply