பள்ளி ஆசிரியையை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற +2 மாணவன் கைது

கன்னியாகுமரி அருகே வீட்டில் தனியாக இருந்த பள்ளி ஆசிரியை ஒருவரை, 16 வயது மாணவன் ஒருவன் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியைச் சேர்ந்த 25 வயதான இளம்பெண் ஒருவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மேலும் தனது வீட்டிலேயே மாணவர்களுக்கு டியூஷன் எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் வீட்டிற்குள் புகுந்து தனியே இருந்த ஆசிரியையை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். சத்தம் போடாதவாறு முகத்தில் துப்பட்டாவை வைத்து அமுக்கி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற போது ஆசிரியை போராடியுள்ளார்.

 

இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவர் ஆசிரியையை கத்தியால் 8-க்கும் மேற்பட்ட இடங்களில் சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து உயிருக்கு போராடிய ஆசிரியையை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதுதொடர்பான புகாரில் மாணவன் கைது செய்யப்பட்டுள்ளான். தனியே இருந்த பள்ளி ஆசிரியை ஒருவரை 16 வயது மாணவன் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply