கனமழையால் அரசுப் பேருந்து பணிமனை சுற்றுச்சுவர் இடிந்தது

ராமநாதபுரத்தில் பெய்து வரும் கன மழையால் அரசு போக்குவரத்து கழக பணிமனை அலுவலகம் சுற்றுசுவர் இடிந்து விழுந்தது. பேருந்துகள் சேதம் அடைந்துள்ளன.

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஐந்தாண்டு காலமாக மழை இல்லாமல் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர். இந்த நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், நேற்று ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் கன மழை பெய்தது. அதிக அளவாக 1101 மில்லி மீட்டர் அளவு மழை பெய்துள்ளது.இதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள புறநகர் போக்குவரத்து பணிமனையில் சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்தது.

 

இதில் பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட பேருந்துகள் சேதம் அடைந்தன. சுமார் 150 அடிக்கு சுற்றுச்சுவர் இரவு நேரத்தில் இடிந்து விழுந்ததால் அந்த இடத்தில் மிகப்பெரிய உயிர் சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது. பேருந்துகள் மட்டும் சேதமடைந்துள்ளன.


Leave a Reply