நகைக்கடை கதவு தானாக மூடியது! மக்கள் ஊழியர்கள் சிக்கல்

தாம்பரம் அடுத்த செம்பரம்பாக்கத்தில் இருக்கும் இந்த கடையில் நேற்று இரவு கடையை அடைப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக 30 அடி உயரம் கொண்ட தானியங்கி கதவு திடீரென மூடிக்கொண்டது இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் ஷட்டரை திறக்க போராடினர் .

ஆனால் பயனளிக்கவில்லை. இதையடுத்து இரவு பதினோரு மணியளவில் தீயணைப்பு துறையினர் வந்து கதவை எந்திரம் மூலம் வெட்டி எடுத்து வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களை மீட்டனர். இரும்பு கதவு வெட்டி எடுக்கப்பட்டதால் இரவு முழுவதும் நகை கடைக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. தானியங்கி கதவு மூடிக் கொண்டது குறித்து நகைக்கடை ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Leave a Reply