பவானியாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருப்பதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

 

கோவையில் உள்ள பில்லூர் அணை நிரம்பி வழிகிறது நீர்மட்டம் 90 அடியை தாண்டி வருவதால் அணைக்கு வரும் 20 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அதிலிருந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

 

இதனையடுத்து கோவை ஈரோடு மாவட்டங்களில் பவானி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் படகுகளில் சவாரி செய்யக்கூடாது படங்களை கடக்க கூடாது எனவும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Leave a Reply