தங்கப் பதக்கம் பெற்ற மாற்றுத் திறனாளி மாணவர்

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் மாற்றுத்திறனாளி மாணவர் பிரிவில் தங்க பதக்கம் பெற்றுள்ளார். இரட்டை பிள்ளைகளில் ஒருவரான பிபின் பெருமூளை பாதிப்பு கொண்டவர் நாகர்கோவிலை சேர்ந்த ஷீலா செல்வராஜ் தம்பதியின் மகனாக பிகினிக்கு வழக்கமான வகுப்புகளுக்கு சென்று படிப்பதில் சிரமம் இருந்தது. ஆனால் நன்றாக படிக்க வேண்டும் என கனவு காண்பதில் எந்த சிரமமும் இருக்கவில்லை.

 

பல்கலைக்கழகத்தில் வீட்டிலிருந்தபடியே பிஏ பொது நிர்வாகம் பயின்ற பிரிவில் தங்கப் பதக்கம் பெற்றுள்ளார். கைதட்டல் வாங்குவது தொலைக்காட்சிகளில் மட்டுமே பார்த்த பின்பு சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கில் கைத்தட்டல் கிடைத்திருக்கிறது.

 

மாற்றுத்திறனாளி குழந்தைகளை படிக்க வைக்க பெற்றோர்கள் எந்த வித தயக்கமும் காட்டவேண்டிய அவசியம் இல்லை என்கின்றனர். பெற்றோர் நம்மால் படிக்க முடியுமா என சந்தேகிக்கும் ஒவ்வொரு மாணவருக்கும் நிச்சயம் முடியும் என ஆணித்தரமாக உணர்த்துகிறார்.


Leave a Reply