7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியது. முதலே பரவலாக மழை பெய்து வருகிறது அரபி கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தர்மபுரி கோவை தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் மாதத்தில் கிடைக்கவேண்டிய 1 சென்டிமீட்டர் மழையில் 8 சென்டி மீட்டர் மழை கிடைத்திருப்பதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மைய இயக்குனர் மாலத்தீவு மற்றும் கேரளா கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




