ரயிலில் பெண் குழந்தை சடலம்

சேலம் பயணிகள் ரயிலில் மூன்று வயது மதிக்கத்தக்க பெண் குழந்தையின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜோலார்பேட்டையில் இருந்து சேலம் நோக்கி பயணிகள் ரயில் வந்து கொண்டிருந்தது அப்போது இருக்கைக்கு கீழே மூன்று வயது மதிக்கத்தக்க பெண் குழந்தையின் சடலம் கிடந்ததை பார்த்து பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

 

இது குறித்து சேலம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து பெண் குழந்தையின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த தற்கான அடையாளங்கள் குழந்தையின் உடம்பில் இருந்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்டு குழந்தை இறந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. வடநாட்டவர் குழந்தை போன்று இருந்த நிலையில் சடலத்தை ரயிலில் விட்டுச்சென்ற பெற்றோர் யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Leave a Reply