தீபாவளி பண்டிகை சென்னையில் தொடங்கிய பட்டாசு விற்பனை

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்காக சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை நடைபெறுவது வழக்கமாகும். அந்த வகையில் இந்த ஆண்டு அக்டோபர் 27-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

 

அதற்காக தீவுத்திடலில் இன்று முதல் பட்டாசு வியாபாரம் ஆனது நடைபெற உள்ளது அதற்காக இங்கு 65 கடைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த 65 கடைகளுக்கும் தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டு இன்று மாலை 4 மணி அளவில் இருந்து வியாபாரம் ஆனது தொடங்கப்பட்டு உள்ளது. இதன் சிறப்பம்சம் என்னவென்று பார்த்தால் ஒவ்வொரு கடையிலும் 20 முதல் 30% வரை பட்டாசு வியாபாரம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பசுமை பட்டாசு சிறப்பம்சம் என்னவென்றால் ஒலியின் அளவானது குறைவாக இருக்கும் அதேபோல் அதிலிருந்து வரக்கூடிய புகையின் அளவானது குறைவாக இருக்கும். இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகமாக ஏற்படாது என்றும் கூறப்படுகிறது பசுமை பட்டாசு முழுமையாக அமல்படுத்த ஓராண்டு காலமாகும் அதாவது அடுத்த ஆண்டு இந்த பட்டாசு வியாபாரத்தில் முழுமையாக பழசை பட்டாசுகளை விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.


Leave a Reply