வரும் 2020 ல் நடைபெற உள்ள ஒலிம்பிக்கிற்காக போட்டியாளர்களை தயார் செய்யும் விதமாக தேசிய அளவிலான கராத்தே போட்டி கோவையில் நடைபெற்றது.கோவையில் ஜித்தோ லீக் 2019 எனும் தேசிய அளவிலான கராத்தே போட்டிகள் துவங்கியது.முன்னதாக இந்திய கராத்தே சங்க தலைவர் ஆர்.தியாகராஜன் போட்டிகளை துவக்கி வைத்தார்.
இந்த போட்டியில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி, பீகார், உத்திர பிரதேசம், உள்ளிட்ட 18 மாநிலங்களில் இருந்து 1200 க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.ஜூனியர் மற்றும் சீனியர் என 12 வயதிற்கு உட்பட்ட,12 வயதிற்கு மேல் என இரு பிரிவாக இரண்டு நாட்கள் போட்டிகள் நடைபெற உள்ளன.இதில் கட்டா என்ற தனிநபர் தற்பாதுகாப்பு மற்றும் குமிட்டே என்ற இரு நபர் சண்டை என்ற வகையில் போட்டிகள் நடைபெற்றது.
இது குறித்து கோவை மாவட்ட கராத்தே சங்க தலைவர் முத்துராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில் வரும் 2020 ஒலிம்பிக்கில் நடைபெற உள்ள கராத்தே போட்டிகளில் வீரர்களை தயார் செய்யும் விதமாக இந்த போட்டிகள் நடைபெற்று வருவதாகவும்,சர்வதேச அளவில் கராத்தே போட்டிகளில் உள்ள சட்ட,திட்டங்களை இது போன்ற போட்டிகளில் வீரர்கள் தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்தார்.