அல்லா விரும்பினால் பாகிஸ்தானில் இருந்து அமெரிக்காவிற்கு விரைவில் ரயில் இயக்கம் என பன்னாட்டு ரயில்வே துறை அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது தெரிவித்துள்ளார். அண்மையில் பாகிஸ்தானின் தலைநகர் கராச்சியில் இருந்து புறப்பட்ட கடையில் பொருத்தப்பட்டிருந்த வழிகாட்டும் எல்இடி பலகையில் சேருமிடம் லாஸ் ஏஞ்சல்ஸ் என்று காண்பித்தால் பயணிகள் குழப்பம் அடைந்தனர்.
இதைப் பார்த்த பயணி ஒருவர் அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இந்த வீடியோ வைரல் ஆன நிலையில் அதனை பார்த்த சமூக வலைதளங்களில் பலரும் டிக்கெட் விலை எவ்வளவு எப்போது நிலவுக்கு ரயில் விடுவதாக திட்டங்களை நாட்டு ரயில்வே துறையை சரமாரியாக கிண்டல் அடித்து பதிவிட்டனர்.
கணினி மூலம் இயங்கும் வழிகாட்டி எல்இடி பலகையில் ரயிலில் பயணித்த மர்ம நபர்கள் தான் லாஸ்ஏஞ்சல்ஸ் என்று மாற்றி உள்ளதாக அந்நாட்டு ரயில்வே துறை விளக்கம் அளித்தது. இந்நிலையில் ரயில்வே துறை அமைச்சர் ஷேக் அகமதிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது அதற்கு அல்லாஹ் விரும்பினால் பாகிஸ்தானிலிருந்து லாஸ்ஏஞ்சல்ஸ் விரைவில் ரயில் இயக்கம் என அவர் பதிலளித்தார்.