தாயை கழுத்தறுத்து கொலை செய்த மகன்

சென்னை பள்ளிக்கரணையில் தாயை கழுத்தறுத்து கொலை செய்த மகன் கத்தியால் தன்னைத் தானே குத்திக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சாய் கணேஷ் நகரைச் சேர்ந்தவர் இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் இவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவரது தாயார் சரஸ்வதி பக்கவாதம் ஏற்பட்டதன் காரணமாக நடக்கும் திறனை இழந்துள்ளார்.

 

இவரை கவனித்துக் கொள்வது தொடர்பான பிரச்சனையில் இவரை தனியே விட்டு அவரது மனைவி பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. சரஸ்வதியை கவனித்து வந்த அவரின் தந்தையும் சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். இதனால் குடும்ப சூழ்நிலையை எண்ணி இவர் வருத்தத்தில் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் தனது தாயாரை தன்னால் கவனித்துக் கொள்ள முடியாது என்ற விபரீத முடிவை எடுத்தவர் தாயை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

 

அதன்பிறகு தன்னை தானே கத்தியால் குத்திக் கொன்று தற்கொலைக்கு முயன்ற அவருக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பெற்ற தாயையே மகன் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply