பெற்ற குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று தாயும் தற்கொலை

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே 2 குழந்தைகளை கிணற்றில் வீசி விட்டு தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொடகரை மலை கிராமத்தை சேர்ந்த சுவராஜ் நாகம்மாள் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருந்தன. கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

 

இருவருக்குமிடையே பாக்காத மேற்பட்ட நிலையில் நாகமான் தனது 2 குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறினார். கணவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் தாயையும் குழந்தைகளையும் தேடிவந்தனர். இன்று காலை ஊர் கிணற்றில் தண்ணீர் எடுக்க சென்ற பெண்கள் இரண்டு சடலங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

 

தகவல் அறிந்த காவல்துறையினர் தீயணைப்பு துறையின் உதவியுடன் நாகம்மாள் மற்றும் அவரது குழந்தைகளான பிரேமா பிரவீன் குமார் ஆகியோரின் சடலங்களை மீட்டனர். அவர்களின் உடல்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. குடும்ப தகராறில் 2 குழந்தைகளை கிணற்றில் வீசி தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கொடகரை கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply