நீர்வீழ்ச்சியில் செல்ஃபி எடுக்கும்போது தவறி கீழே விழுந்து மாணவர் பலி

சேலம் அருகே நீர்வீழ்ச்சியில் செல்பி எடுக்க முயன்ற போது 500 அடி பள்ளத்தில் தவறி விழுந்து கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்தார். சேலம் மாவட்டம் கல்வராயன் மலையில் இருக்கும் பல நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இந்நிலையில் நாகலூர் வடபகுதியிலுள்ள நீர்வீழ்ச்சியில் பிரகாஷ் என்ற பொறியியல் மாணவர் தனது நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார்.

 

அப்போது தண்ணீர் கொட்டும் இடத்தின் மேல் பகுதிக்கு சென்று பிரகாஷ் அங்கிருந்து செல்ஃபி எடுத்துள்ளார். அப்போது நிலை தடுமாறி அங்கிருந்து 500 அடி பள்ளத்தில் தவறி விழுந்தார். இதையடுத்து அவரது உடலை தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி இன்று காலை மீட்டனர்.


Leave a Reply