தர்மபுரியில் 230 பேரில் 11 பேருக்கு டெங்கு

தர்மபுரி அரசு மருத்துவமனையில் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ள 230 பேரில் 11 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக டெங்கு காய்ச்சல் நோய் பரவ தொடங்கியுள்ளது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை உடல் காய்ச்சலை கட்டுப்படுத்தும் விதமாக சிறப்பு காய்ச்சல் பிரிவு ஏற்படுத்தப்பட்டு 24 மணி நேரமும் நோயாளிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

 

இதில் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 230 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் 4 குழந்தைகள் உட்பட 11 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மருத்துவமனை முதல்வர் சீனிவாச ராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர்களில் 11 பேருக்கு டெங்கு அறிகுறி இருப்பதாக தெரிவித்தார்.

 

அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்படுவதாக கூறியவர் காய்ச்சல் அறிகுறியுடன் வருபவர்களுக்கு நிலவேம்பு கசாயம், பப்பாளி இலைச்சாறு உள்ளிட்ட சித்த மருந்துகள் வழங்கப்படுவதாகவும் காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் மக்கள் மருந்தகம் செல்லாமல் மருத்துவரை அணுகும் படியும் அறிவுறுத்தியுள்ளனர்.


Leave a Reply