பிளாஸ்டிக் ஒழிப்பில் நாட்டுக்கே தமிழகம் முன்னோடியாக திகழ்வதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் கூறியுள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள செந்தாம்பாளையம் மகாத்மா காந்தி கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டி அமைத்து அமைச்சர் கருப்பண்ணன் தமிழ்நாட்டில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு கடந்த ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி முதல் தடை அமலில் இருந்து வருகிறது என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் அனைத்து கடைகளும் மூடப்பட்டு விட்டதாகவும் வடமாநிலங்களில் இருந்து வரும் பிளாஸ்டிக் பொருட்களை கண்காணித்து சுற்றுச்சூழல் அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் கூறினார். செந்தாம்பாளையம் மகாத்மா காந்தி கோவிலை அரசே ஏற்று நடத்துவது குறித்து நிர்வாகிகள் முறையாக கோரிக்கை மனு கொடுத்தால் முதலமைச்சரிடம் பேசிய அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கருப்பண்ணன் குறிப்பிட்டார்.