சுபஸ்ரீ கனடா செல்லும் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி

சென்னை அருகே பேனர் விழுந்ததால் விபத்தில் சிக்கி உயிரிழந்த இளம்பெண் சுபஸ்ரீ வெளிநாட்டிற்கு மேற்படிப்பிற்கு செல்ல எழுதிய தகுதி தேர்வில் முதல் வகுப்பில் தேர்வாகியுள்ளார். சென்னை குரோம்பேட்டை பவானி நகரை சேர்ந்த பெண் என்ஜினீயர் சுபஸ்ரீ கடந்த 12ஆம் தேதி மோட்டார் சைக்கிளில் சென்றபோது கீழே விழுந்தார். அப்போது அவர் பின்னால் வந்த லாரி ஏறியதில் பரிதாபமாக உயிர் இழந்தார்.

 

பிடெக் முடித்திருந்த சுபஸ்ரீ அதில் முதுகலைப் படிப்பை கனடா நாட்டில் படிக்க முடிவு செய்து கடந்த 7 மற்றும் 10 ஆம் தேதி சென்னை பிரிட்டிஷ் கவுன்சிலில் ஹெல்பிஎஸ் தகுதி தேர்வை எழுதி இருந்தார். இந்நிலையில் சுபஸ்ரீ என் வீட்டிற்கு வந்த கொரியரில் சுபஸ்ரீ முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றது தெரிய வந்தது. இதை கண்ட சுபாஷினியின் பெற்றோர் தேர்வு முடிவை காணவில்லையே என வருத்தத்துடன் கண் கலங்கினர்.

 

தகுதி தேர்வில் 9 மதிப்பெண்களுக்கு 7 கேள்வி மதிப்பெண்கள் பெற்று முதல் வகுப்பில் தேர்வு பெற்றதால் கல்வி உதவித் தொகையுடன் கூடிய மேல்படிப்பு சுபஸ்ரீ கிடைத்திருக்கும் என்று அவரது பெற்றோர் தெரிவித்தனர்.


Leave a Reply