பாலியல் மிரட்டலுக்கு ரகசிய கேமராக்கள்

மத்திய பிரதேசத்தில் பாலியல் மிரட்டலுக்கு ரகசிய கேமராக்கள் லிப்ஸ்டிக்கும் கண்ணாடிகளும் மறைத்து வைக்கப்பட்டதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த 18, 19 ஆம் தேதிகளில் இந்தூர் மற்றும் போபாலில் நான்கு பெண்கள் மற்றும் ஒரு ஆண் கைது செய்யப்பட்டனர்.

 

இவர்கள் அரசியல் தலைவர்கள் காவல் அதிகாரிகள் தொழில் அதிபர் உள்ளிட்டோருக்கு பாலியல் தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுத்து அவர்களைப் பாலியல் நடவடிக்கை காட்சிகளை ரகசியமாக படம் எடுத்து பின்னர் பணம் கேட்டு மிரட்டி வந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

 

சுமார் 3 கோடி ரூபாய் அளவிற்கு இந்த கும்பல் பணம் படித்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். லிப்ஸ்டிக், செல்போன்கள் மற்றும் கண்ணாடிகளில் ரகசிய கேமராக்களை அமைத்து அவர்கள் அந்தரங்க காட்சிகளை படம் எடுத்தனர். பாதிக்கப்பட்ட ஒருவர் புகார் அளிக்க இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.


Leave a Reply