பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸ் நாட்டில் 6.4 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் மாகாணத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக நாட்டின் பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவானதாக பிலிப்பைன்ஸ் எரிமலை இயல் மற்றும் நிலநடுக்க புயல் மையம் தெரிவித்திருந்தது. நிலப்பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

குறிப்பிட்ட நகரிலிருந்து 130 கிலோ மீட்டர் தொலைவிலும் சுமார் 60 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த மாகாணம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. அதேசமயம் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து காயம் உயிரிழப்புகள் உள்ளிட்ட சேதம் குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.


Leave a Reply