சாதியை காரணம் காட்டி கைக்குழந்தையுடன் தன்னை தவிக்க விட்டு சென்ற கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி பெண் ஒருவர் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீருடன் புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் ப்ரியங்கா. அதே பகுதியில் உள்ள நூற்பாலையில் பணிபுரிந்த போது அங்கு ஓட்டுநராக இருந்த ரவிக்குமாரும் பிரியங்காவும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர்.
கடந்த வருடம் திருமணம் செய்துகொண்ட இருவருக்கும் 30 நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில் சாதியை காரணம் காட்டி பிரியங்காவும் குழந்தையையும் ரவிக்குமார் பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பிரியங்கா கணவருடன் தன்னை சேர்த்து வைக்க கோரி கைக்குழந்தையுடன் திண்டுக்கல் ஆட்சியரிடம் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார்.