மதுரையில் 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டவர்கள் 6 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்காக தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ள நிலையில் அந்த ஆறு பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக ராஜாஜி அரசு மருத்துவமனை டீன் வனிதா தெரிவித்துள்ளார்.

 

டெங்கு காய்ச்சலுக்கான ஊசி மருந்துகள் தேவையான அளவிற்கு இருப்பதாக தெரிவித்த மனிதா காய்ச்சல் பரவாமல் கட்டுப்படுத்த கிராமங்களில் சிறப்பு முகாம்கள் நடத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 47 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.


Leave a Reply