டெல்லியில் லேசான நில அதிர்வு: பொதுமக்கள் அச்சம்

டெல்லியில் லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது டெல்லி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர். டெல்லியில் இருக்கக்கூடிய முக்கியமான இடங்களில் இந்த லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. டெல்லி மட்டுமல்லாமல் இமாச்சல் பிரதேசம், சண்டிகர் உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் இந்த லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

 

டெல்லியைப் பொறுத்தவரை டெல்லியின் புறநகர் பகுதியான நொய்டாவில் இட்ட பகுதிகளிலும் டெல்லியின் முக்கிய பகுதியாக இருக்கக்கூடிய நாடாளுமன்றம் உள்ளிட்ட பகுதிகளிலும் இந்த நில அதிர்வு என்பது உணரப்பட்டுள்ளது. உடனடியாக பொதுமக்கள் கட்டிடங்களில் இருந்து சாலைகளுக்கு வந்துள்ளனர். பொதுவாகவே தலைநகர் டெல்லியை பொறுத்தவரை அவ்வப்போது இது மாதிரியான நில அதிர்வு ஏற்படுவது வழக்கமான ஒன்றாக தான் இருந்து வருகிறது.

 

அங்கு இருக்கக்கூடிய காவல்துறையினர் கொண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. எந்தவிதமான பதட்டமும் அடைய தேவையில்லை அனைத்தும் சுகமான நிலையில் இருக்கிறது என்று காவல்துறையினர் உடனடியாக அறிவிப்புகளை ஆங்காங்கே தெரிவித்து வருகின்றனர். பாகிஸ்தான் மேற்குவங்கத்தில் அல்லது நேபாளம் உள்ளிட்ட வெளிநாடுகளில் இதுமாதிரியான நிலநடுக்கம் ஏற்பட்டால் அதன் தாக்கம் தலைநகர் டெல்லியிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் ஏற்படும்.

 

தற்போது ஏற்பட்ட இந்த நில அதிர்வு என்பது பாகிஸ்தானின் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக உணரப்பட்டு உள்ளது அதை மையமாக கொண்டு ஏற்படக்கூடிய நிலநடுக்கத்தில் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. அதனையடுத்து தான் தற்போது வடமாநிலங்களில் இந்த நிலா தீர்ப்பு என்பது உணரப்பட்டுள்ளது பெரிய அளவிலான சேதம் எதுவும் இல்லை. டெல்லியை விடவும் சண்டிகர் இமாச்சல் உள்ளிட்ட மற்ற இடங்களில் டெல்லியில் உணவை விட அதிக அளவில் உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Leave a Reply