பரிசோதனை முடிவு வருவதற்குள் சிறுமி உயிரிழப்பு!

சென்னையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த 6 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் நிலையில் டெங்கு காய்ச்சலால் தான் அவர் உயிர் இறந்தாரா என்பது இரத்த பரிசோதனை முடிவு வந்த பிறகுதான் தெரியவரும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கூலி தொழிலாளர்களான சக்திவேல், கவிதா தம்பதியினரின் 6 வயது மகளான மகாலட்சுமி மற்றும் 2 வயது ஆண் குழந்தை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்ததால் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டனர்.

டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு உள்ளதா என்பதை அறிய இன்று காலை சிறுமியிடம் இருந்து பரிசோதனைக்கு ரத்தம் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. பரிசோதனை முடிவு தெரிய வர 15 மணி நேரம் ஆகும் என்று கூறப்படுகிறது இந்த நிலையில் சிறுமி மகாலட்சுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இதனையடுத்து சிறுமியின் உடலை பெற்றுக் கொண்ட பெற்றோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 வயது ஆண் குழந்தையும் உடன் அழைத்துச் சென்றுவிட்டனர்.

 

டெங்கு காய்ச்சலால் தான் சிறுமி இறந்தாரா என்பது அவரது ரத்த பரிசோதனை முடிவு வந்த பிறகு முடிவு செய்யப்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.


Leave a Reply