சமூக நலம் சார்ந்த அமைப்பை உருவாக்க நடிகர் சிம்பு திட்டம்

சிம்பு ரசிகர் மன்றத்தை சமூக நலன் சார்ந்த அமைப்பாக மாற்ற நடிகர் சிம்பு திட்டமிட்டுள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. ஓய்வுக்காக தாய்லாந்து சென்றுள்ள நடிகர் சிம்பு சில தினங்களில் சென்னை திரும்ப உள்ளார். அதன் பிறகு தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாகவும் ரசிகர் மன்றத்தை சமூக நலன் சார்ந்த அமைப்பாக மாற்றுவது குறித்து முக்கிய நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தெரிகிறது.

 

மேலும் அரசியல் மாநாடு நடத்துவது குறித்தும் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் சிம்பு ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஜல்லிக்கட்டு காவிரி உள்ளிட்ட பிரச்சினைகளின் போது நடிகர் சிம்பு தமிழகத்திற்கு ஆதரவான கருத்துக்களை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் சமூக நலன் சார்ந்த அமைப்பு அவர் உருவாக்க திட்டமிட்டு இருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply